இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400யை எட்டியுள்ளது.
சீனாவில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியை தொடர்ந்து, தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அச்சம் அடைந்துள்ளன. மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post