ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணியை வீழ்த்தியுள்ளது. இப்போது மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்று நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இன்று காலை மெல்பர்னில் உள்ள ஜங்ஷன் ஓவலில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
Discussion about this post