கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என இந்திய திரைத்துறையில் தற்போது அதிகமாக கேட்கக் கூடிய வார்த்தை METOO. அதாவது, ஆண்களால், பெண்களுக்கு இழைக்கப்படும் செக்ஸ் டார்ச்சர் குறித்த புகாரை, METOO இயக்கத்தில் தெரிவிக்கலாம். வைரமுத்து மீது சின்மயி, பாலிவுட் நடிகர் நானாபடேகர் மீது ஸ்ரீ தத்தா, லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மீது ஸ்ரீரெட்டி உள்ளிட்டோர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், METOO இயக்கம் குறித்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், METOO இயக்கத்தை வரவேற்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார். பட வாய்ப்புக்காக நடிகைகள் ஆண்களுடன் படுக்கைக்கு செல்வதாகவும், அதனால், ஆண்களை சொல்லி தப்பில்லை எனவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை யாரும் இதுவரை படுக்கைக்கு அழைக்கவில்லை என்றும் நானும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post