வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்எல்ஏ காத்தவராயன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நேற்றைய தினம் தான் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அடுத்தடுத்து 2 திமுக எம்எல்ஏக்கள் காலமானதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2 நாட்களில் அடுத்தடுத்து 2 திமுக எம்எல்ஏக்கள் மரணம் அடைந்ததால் நாளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post