குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.தலைநகர் டெல்லியில் ஒரே இடத்தில் இந்த சட்டத்திற்கு எதிராகவும்,ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றதால் அங்கு மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்தார்.அதே சமயம் இதனால் இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக வந்து நிற்பேன் என்றும் கூறினார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு இஸ்லாமியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமிய குருமார்களை சந்தித்து CAA தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து விளக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Discussion about this post