போலந்தை சேர்ந்த 25 வயதான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இளம் பெண் ஒருவர் பிரபல ராப் கலைஞர் ஒருவரின் தீவிர ரசிகையாவார்.
அந்த ராப் கலைஞர் மீது கொண்ட தீவிர அன்பால் அவரைப்போலவே அலெக்சாண்ட்ரா தனது கண்களில் உள்ள வெள்ளை பகுதிக்கு டை அடிக்க ஆசைப்பட்டுள்ளார்.
இதனால் பச்சை குத்தும் நபர் ஒருவரை அணுகி, தன்னுடைய கண்களுக்கு டை அடித்துள்ளார். டை அடிக்கும்போதே தனது கண்களில் வலி ஏற்படுவதாக அலெக்சாண்ட்ரா கூறியுள்ளார்.
இது சாதரண வலிதான் என்றும், சில நாட்களுக்கு வலி நிவாரணி சாப்பிட்டால் சரியாகிவிடும் எனவும் கூறி தொடர்ந்து டை அடித்துள்ளார் அந்த டாட்டூ போடும் நபர்.
இந்நிலையில், டை அடித்த சில நாட்களில் அலெக்சாண்ட்ராவின் ஒரு கண்ணில் பார்வை பறிபோயுள்ளது. அலெக்சாண்ட்ராவை சோதித்த மருத்துவர்கள், அவரது மற்றொரு கண்ணும் பார்வையை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அலெக்சாண்ட்ராவிற்கு பச்சை குத்தியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post