திமுக எம்எல்ஏ காத்தவராயன், இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற அந்த கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்
துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. குடியாத்தம், சட்டசபை தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன்.
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காத்தவராயன் நேற்று மறைந்தார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி சடங்கு பேரணாம்பட்டில், இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு சென்றிருந்தனர். அங்கு ஸ்டாலின், துக்கம் தாங்காமல் கண்ணீர் சிந்தி அழுதார். இருப்பினும், கண்ணீரை தனது கைகளால் துடைத்துக் கொண்டார்.
இந்த காட்சி, அங்கிருந்த ஊடகத்தினரின் கேமராக்களில் தப்பவில்லை. காத்தவராயன் மற்றும் அதற்கு முந்தைய நாளில் கே.பி.பி.சாமி என இரு எம்எல்ஏக்களை 2 நாட்களில் இழந்திருந்தது திமுக. அந்த சோகம் ஸ்டாலினை ரொம்பவே வாட்டியுள்ளது.. இதனால் சோகத்தில் மூழ்கிய திமுக.
Discussion about this post