ஏப்ரலில் கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு… இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, ஒருவழியாக கட்சி ஆரம்பிக்கப் போகிறார். இதற்கான ஆயத்தங்களில் ரஜினி இறங்கிவிட்டார்.
புதுக்கட்சி துவக்கினால், அதன் பெயர், கொடி, கொள்கைகள், விதிமுறைகள் என அனைத்தையும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதற்கு ஆலோசனை பெற, ரஜினி ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில் டில்லி வந்திருந்தனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்தித்து தேவையான ஆவணங்கள் குறித்து கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஒரு வழக்கறிஞர் மூலமாக, முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவரை, ரஜினி தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரும்,புதுக்கட்சி துவங்குவது குறித்து, ரஜினிக்கு சில ஆலோசனைகளை வழங்கி உள்ளாராம்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அநேகமாக தமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post