பல தடைகள் தாண்டி திரைக்கு வந்துள்ள திரௌபதி படம் வசூல் வேட்டையாடி வருகிறது.
ரிச்சர்டு ரிஷி, ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாக அமோக வரவேற்பை பெற்றுள்ள படம் திரௌபதி. இப்படத்திற்கு ஊடகத்தார் மத்தியில் கலவையான விமர்சனங்களை வைக்கப்பட்டாலும் பாமகவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் அந்த சமூக மக்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆணவக்கொலைகளுக்கு எதிரான சமூக விழிப்புணர்வாக இப்படம் அமைந்துள்ளது பலராலும் ஏற்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களின் வாழ்க்கை குறித்த பாதுக்காப்பையும் வலியுறுத்தும் இப்படத்திற்கு தியேட்டர்களில் கூட்டத்துடன் ஹவுஸ்புல்லாக போய்க் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் இரண்டு நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. சென்னையில் – ரூ 32 லட்சம், தமிழ்நாடு – ரூ 4.67 கோடி. மிகக்குறைந்த செலவில் தயாரான இந்த படம் செம வசூல் வேட்டையாடி வருகிறது.
Discussion about this post