அரசியல் படமே வேண்டாம்…. கோலிவுட், டோலிவுட் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை, அரசியல் படங்களில் நடிக்க மறுக்கிறாராம்.
கோலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் குளிர்ச்சியான நடிகையிடம் புதுமுக இயக்குனர் ஒருவர் கதை சொன்னாராம். அது, சாதி வெறி மற்றும் அரசியலை கருவாக கொண்ட கதை என்பதால் அந்த நடிகை அதில் நடிக்க மறுத்து விட்டாராம்.
சாதி, அரசியல் இரண்டும் இல்லாமல் ஒரு கதையை சொல்லுங்க நடித்து தருகிறேன்” என்று கூறி, இயக்குனரை நல்லவிதமாக அனுப்பி வைத்தாராம் நடிகை. சர்ச்சை, பிரச்சனைகள் எதிலும் சிக்காமல் இருப்பதற்காக நடிகை, அந்த மாதிரி கதைகளை தவிர்த்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது..
Discussion about this post