வெங்காயம் சமையலுக்கு அவசியம் தேவைப்படும் உணவுகளில் முக்கியமானது.வெங்காயம் இல்லாத சமையலை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவுக்கு அனைத்து சமையலிலும் வெங்காயத்தின் தேவை இருக்கும்.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது பலருக்கும் வேதனையை கொடுத்துள்ளது.
இந்நிலையில் வெங்காயத்தினை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அவை என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.
வெங்காயத்தினை பச்சையாக சாப்பிடுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
நான்கு அல்லது ஜந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
சர்க்கரை நோக்கி காரணமான இன்சுலின் குறைபாட்டை சமாளிக்க வெங்காயத்தினை சின் வெங்காயத்தினை சாப்பிட்டு வந்தால் கணையத்தை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
மேலும் சின்ன வெங்காயம் கல்லீரலில் பித்தத் திரவத்தை சுரக்க வைக்கிறது இதன் மூலம் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
Discussion about this post