டென்மார்க் ஓபன் பாட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சீன தைபே வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வியைடந்தார்.
டென்மார்க்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் போட்டி நடைபெற்று வந்தது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், உலகின் முதல்நிலை வீராங்கனையான சீன தைபேயின் டை சூ யிங்கை சந்தித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை 13-21 என்ற புள்ளிக் கணக்கில் சாய்னா இழந்தார். அடுத்த செட்டை 21-13 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட்டில் 6-21 என்ற புள்ளிக் கணக்கில் பறிகொடுத்தார்.
52 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியை 13-21, 21-13, 6-21 என்ற செட் கணக்கில் இழந்தார். இதன் மூலம் இரண்டாமிடத்தை சாய்னா பெற்றார்
இதுவரை சாய்னாவும் டைசூ யிங்கும் 18 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் சாய்னா 5 போட்டியிலும், டை சூ 13 போட்டிகளிலும் வெற்றி பெறுள்ளனர்.
Discussion about this post