வடகிழக்கு டெல்லி கலவரத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் என்ற இளைஞரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தது.
டெல்லியில் பிப்ரவரி இறுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராடியவர்கள் இருதரப்பும் மோதிக்கொண்டதால் மத கலவரமாக வெடித்தது.
இந்த வன்முறை வெறியாட்டத்தில் 48 பேர் உயிரிழந்து உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட 1,427 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர், 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி மஜ்பூர் பகுதியில் கலவரத்தின் போது இளைஞர் ஷாருக் துப்பாக்கி சூடு நடத்தியதும், போலீசாரை மிரட்டியது புகைப்படமாக வெளியாகி நாட்டையே அதிரவைத்தது.
துப்பாக்கியோடு மிரட்டிய தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் போட்டோக்கள் வெளியானதும் இளைஞர் தலைமறைவு ஆகிவிட்டார்.
டெல்லி சிறப்பு படை போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டதில், அந்த இளைஞர் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி நகரில் இளைஞர் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் அங்கு சென்ற டெல்லி சிறப்புபடை போலீசார் இளைஞர் ஷாரூக்கை கைது செய்தது.
விசாரணையின் போது ஆத்திரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஷாருக் தெரிவித்து உள்ளார். இதற்கு முன்னதாக அவர் மீது எந்த ஒரு கிரிமினல் வழக்கும் பதிவாகவில்லை.
துப்பாக்கி சூடு நடத்தியது, மிரட்டியது தொடர்பான வீடியோவை காட்டிய கேள்விகளை எழுப்பிய போது அவர் பதில் அளிக்காமல் நின்று உள்ளார்.
Discussion about this post