காதலிக்க மறுத்த 14 வயது பள்ளி மாணவி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்தபோது, அவரது வீட்டினுள் மறைந்திருந்த இளைஞன் , திடீரென சிறுமியின் வாயை பொத்தி அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தபோது, நித்தியானந்தம் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனியை பகுதியை சேர்ந்த 8-வது வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி ரேகாவை, அவரது வீட்டின் வீட்டில் வசிக்கும் 27 வயதான நித்தியானந்தம் என்ற வாலிபர், பின் தொடர்ந்து காதலிப்பதாக தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த சிறுமி அவனது காதலை எக்க தயாராக இல்லை, தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி வந்துள்ளார். தன்னை காதலிக்க மறுத்தால் சிறுமியின் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்துள்ளான் நித்தியானந்தம், இது பற்றி தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை பள்ளிவிட்டு வந்த அந்த சிறுமி மொட்டை மாடியில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது நித்தியானந்தன் தன்னை காதலிக்கச் சொல்லி மீண்டும் தொல்லை செய்ததாகவும் அவர் சம்மதிக்காததால் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கொண்டு சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளான்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கீழிருந்தவர்கள் சென்று பார்த்த போது நித்தியானந்தன் அந்தச் சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயற்சியில் இருந்திருக்கிறான். அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்துவிட்டு அவன் தப்பியோடிய நிலையில், சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தப்பியோடிய நித்யானந்தத்தை போலீசார் தேடிவருகின்றனர்
Discussion about this post