அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனியில் உள்ள ஒரு வீட்டின் மேல் தளத்தில் அந்தச் சிறுமியும் கீழ் தளத்தில் நித்தியானந்தன் என்ற அந்த இளைஞனும் வசித்து வந்துள்ளனர்.
நித்தியானந்தன் அந்தச் சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளிவிட்டு வந்து மொட்டை மாடியில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை அணுகிய நித்தியானந்தன் தன்னை காதலிக்கச் சொல்லி மீண்டும் தொல்லை செய்ததாகவும் அவர் சம்மதிக்காததால் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கொண்டு சிறுமியின் கழுத்தை அறுக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கீழிருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது நித்தியானந்தன் அந்தச் சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயற்சியில் இருந்திருக்கிறான்.
அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்துவிட்டு அவன் தப்பியோடிய நிலையில், சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.தப்பியோடிய நித்யானந்தா இன்னும் போலீஸிடம் சிக்கவில்லை.
Discussion about this post