பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து விட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை சமந்தா.
சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் சமந்தா. மேலும், திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் குழந்தை பெறாமல் இருந்து வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தனது உடலை மிகவும் பிட்டாக வைத்து வருகிறார். இதனால் சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் சம்பீத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக இருக்கும் சமந்தாவை அவரது ரசிகர்களே ட்ரோல் செய்துவந்தனர். ஆனால், அப்போதும் அம்மணி அடங்குவதாக இல்லை. மேலும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரும்பாலான நேரத்தை ஜிம்மில் தான் செலவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா, ஜிம்மில் உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 100 கிலோ கொண்ட எடையை அசால்ட்டாக தூக்கி டெட் லிப்ட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post