தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வந்த மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது குறித்து இந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைக் கூட பதிவிட்டிருந்தார். அதேபோல இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. டெல்லியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக ஷூட்டிங் தடைபட்டது. அதேபோல நெய்வேலியில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது விஜய்க்கு ஐடி ரெய்டு நடைபெற்றதால் அப்போது ஒருசில நாட்கள் படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.
இந்தநிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு நாள் மட்டும் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார் என்று நாளிதழில் செய்தி ஒன்றின் துணுக்கு செய்தி ஒன்று சமூக ஒன்றின் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த செய்தி துணுக்கில் இந்த படத்துக்கு இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை எழுதியுள்ளார் இவர், அமலாபால் நடித்த ஆடை வெற்றிப் படத்தை இயக்கியவர். மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் ரத்னகுமார் ஒரு காட்சியில் நடித்து உள்ளனர். இந்த காட்சியை விஜய் கேமரா ஆக்ஷன் சொல்லி டைரக்ட் செய்துள்ளார்.
மேலும், இந்த காட்சியை ஒரு நாள் முழுவதும் இயக்குனர் இருக்கையில் அமர்ந்து அவர் படமாக்கி உள்ளார் என்றும் இரண்டு இயக்குனர்களுக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்து கேமராவை இயக்குனர்களுக்கும் பார்த்து விஜய் டைரக்ட் செய்ததை படக்குழுவினர் கைதட்டி ரசித்தனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், தனது 27 வருட சினிமா வரலாற்றில் இயக்குனர் அவதாரமெடுத்து விஜய் இயக்கிய இந்த காட்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.
Discussion about this post