தமிழ் சினிமா உலகில் அம்மா என்ற கதாபாத்திரம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் கன அந்த பொருந்தி உள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் படங்களில் குணசித்திர வேடங்களிலும், பெரும்பாலும் நாயகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலலும் தான் நடித்து உள்ளார். இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் சமீபத்தில் நடிகை அளித்திருந்தார். அதில் தனக்கு மகனாக நடித்த பல நடிகர்கள் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அஜித் குறித்து அவர் கூறியது, இயக்குனர் விஜய் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். கிரீடம் படம் பண்ணும் போது தான் நான் அஜித்துடன் முதன் முறையாக நடித்தேன். அஜித் பாக்குறதுக்கு பயங்கர அழகு. அஜித்தை அழகு சுந்தரன் அவர் செம கெத்தாக, மாஸாக இருப்பார். நான் அவரை முதன் முதலாக பார்க்கும் போது சூட்டிங்கில் இவர் வைத்தது தான் சட்டமாக இருக்கும் என்றும், ரொம்ப அடாவடியாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், உண்மையாலுமே அஜித் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப தங்கமான மனிதர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வெள்ளைக்காரர் என்று சொன்னால் நான் அஜித்தை தான் சொல்லுவேன். அந்த அளவிற்கு அழகு. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் படத்திற்கு எவ்வளவு சீன் போடலாம். ஆனால்,அஜித் மிக எளிமையாக இருப்பார்.
இவருக்கு எழுதப்பட்ட டயலாக் எதுவாக இருந்தாலும் சில நேரம் அதை நீங்கள் சொல்லுங்கள் நன்றாக இருக்கும் என்று என்னை செய்யச் சொல்லுவார். அந்த அளவுக்கு கூட செய்யச் நடிகர்களுக்கு மரியாதையும், உரிமையும் தருவார். இதெல்லாம் ஒரு மாஸ் ஹீரோ செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அஜித் எல்லாரிடமும் சகஜமாக பழகுவார். அவருடைய குடும்பத்தில் ஒருவராகவே எல்லோரையும் பார்ப்பார். அது எல்லாம் நான் அவரிடம் ரொம்ப ரசித்தேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Discussion about this post