மதுரை மாவட்டம் உசுலம்பட்டி அடுத்துள்ள புல்லநெறியை சேர்ந்த தம்பதி வைரமுருகன் மாற்றும் சௌமியா.
இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண்குழந்தை உள்ள நிலையில் கடந்த இரண்டரை மதத்திற்கு முன் இன்னொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.கடந்த 2 ஆம் தேதி திடிரென்று குழந்தை இறந்து விட்டதாக அருகிலிருக்கும் வேப்பமரத்தின் அருகில் அந்த குழந்தையை புதைத்துள்ளனர்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் குழந்தை உடல் நல குறைவினால் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் செக்கானுராணி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதை பற்றி நடத்திய விசாரணையில் தாங்களே கொன்று புதைத்து விட்டதாக காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.இதை தொடர்ந்து தந்தை ,தாய்,மற்றும் தாத்தா ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
Discussion about this post