தெலுங்கு வருடப் பிறப்பு அன்று (மார்ச் 25ம் தேதி) ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் அம்மாநிலத் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில செய்தித்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பெர்னி வெங்கட் ராமையா, “ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு 26 லட்சம் ஏழை மக்களுக்கு இலவசப் பட்டா வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது.
வீட்டு மனைகளில் வீடு கட்டிக் கொள்ளவும் ஐந்து ஆண்டுகள் வரை வங்கியில் அடமானம் வைத்து கொள்ளவும், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்து கொள்வதற்கான உரிமையுடன் கூடிய பட்டா வழங்கப்பட உள்ளது..
இந்த நிலம் வழங்குவது தொடர்பான வேலைகள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அனைவருக்கும் ஒரே நாளில் பத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Discussion about this post