சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் தான் ஆடியதிலேயே சிறந்த கேப்டன்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
2002ம் ஆண்டு பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான ஷேன் வாட்சன் மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணியில் ஆடியுள்ளார். அவரே கூட ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாட்சன், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே ஆகிய அணிகளில் ஆடியுள்ளார்.
இவ்வாறு சர்வதேச அளவில் பாண்டிங், வார்னே, ராகுல் டிராவிட், தோனி, ஸ்மித், விராட் கோலி, மைக்கேல் கிளார்க் என பல கேப்டன்களின் கேப்டன்சியின் கீழ் ஆடிய வாட்சன், சிறந்த கேப்டன் யார் என்று தெரிவித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், அவரிடம் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வாட்சன், ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், தோனி ஆகிய நால்வரின் பெயர்களை தெரிவித்தார்.
Discussion about this post