கோடையில் அதிகளவு வெப்பமானது நிலவும். இந்த நேரத்தில் பெரும்பாலும் அனைவரும் குளிர்ந்த உணவுகளையே எடுத்து கொள்வர்.
கோடையில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும், செரிமான பிரச்சனை ஏற்படும் என்ற கருத்தானது பரவலாக அனைவரிடமும் நிலவும். ஆனால் இது தவறான கருத்து.
முட்டையில் கால்சியம், இரும்பு சத்து, விட்டமின்கள் நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. உடல் வெப்பம் குறையும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
முட்டையில் உள்ள அதிகளவு சத்துக்களானது உடலில் உள்ள நீர்ச்சத்தினை தக்கவைத்து கொள்ள உதவுகிறது.
மேலும் உடல் சோர்வடையாமல் இருப்பதற்கு தேவையான ஆற்றலை தருகிறது.
ஆனால், முட்டையினை சாப்பிடும் போது அதன் எண்ணிக்கையில் கவனம் தேவை. அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்வது உடலுக்கு அசவுகரியத்தினை ஏற்படுத்தும்.
முட்டையினை வேகவைத்து சாப்பிடுவதே நல்லது. கோடையில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது என்கின்றனர் வல்லுனர்கள்.
Discussion about this post