பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக அந்த ரயிலை ஓட்டிய லோகோ பைலட் நிர்வாகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசராவிழா நடந்து கொண்டிருந்தபோது திரண்டிருந்த கூட்டத்திற்கு அருகே ரயில் வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டது இதில் 61 பேர் பலியானார்கள். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து டி.எம்.யூ லோகோ பைலட் அரவிந்த் குமார் (டீசல் மல்டி யூனிட்) ரயில் நிர்வாகத்திற்கு எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
சம்பவத்தின் போது திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து அவசரமாக பிரேக் போட முயற்சித்தோம் என்றும், ஆனால், கூட்டத்தில் இருந்த சிலர் ரயில் மீது கற்களை வீசி தாக்கியதால் ரயிலை நிறுத்த இயலாத நிலை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post