பெரும்பாலும் அசைவ பிரியர்களுக்கு பரிந்துரைக்கப்படுவது கடல் உணவுகள் தான். இறைச்சி வகைகளில் இருப்பதை விட கடல் உணவில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.
மீனில் அதிகளவு புரோட்டீன், விட்டமின் மற்றும் ஓமேகா போன்ற சத்துக்கள் அதிக உள்ளது. இது உடலினை பாதுகாத்து மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
அதிக சத்துக்கள் நிறைந்த உடலுக்கு நன்மை தரக்கூடிய மீன்களில் சில.
Salmon Fish
சால்மன் மீனில் அதிகளவு ஓமேகா 3 மற்றும் பாதரசமானது உள்ளது. இது உடலினை ஆரோக்கியமாக வைக்கிறது.
மேலும் இதில் விட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளதால் இதய நோய் உருவாவதை தடுக்கிறது.
Tuna Fish (சூரை மீன்)
டுணா மீனில் விட்டமின் பி12 மற்றும் டி அதிகமாக உள்ளது. இது கால்சியம் மற்றும் இரும்பு சத்தானது உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவில் சேர்த்து கொண்டால் மிக நல்லது.
டுணா மீனானது அதிக சோடியம் கொண்டதால் உடலுக்கு மிக நல்லது. இதில் தனியாக உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல.
Cod Fish
ஒரு வகை கடல் மீனான காட் மீன் உடலுக்கு உகந்த ஆரோக்கியமான உணவில் ஒன்றாகும். இதில் விட்டமின் பி12 மற்றும் ஓமேகா உள்ளது. தமனி பிரச்சனைகள் உடையவர்கள் இதனை உணவில் சேர்த்து கொண்டால் இதய சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். இந்த மீனை சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு பிரச்சனை வருவது மிக குறைவே.
Trout Fish
ஒரு வகை குளத்து மீனான டிரவுட் உடல் ஆரோக்கியத்திற்கு மிக ஏற்றது. நன்னீரில் வளரும் டிரவுட் மீனை உணவில் சேர்த்து கொண்டால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது குறையும்.
Herring
சர்டைன் மீன் வகையினை சேர்ந்ததாகும். இதில் விட்டமின்களும் ஜிங்க் கும் நிறைந்துள்ளது. மிக மென்மையாக சதையினை கொண்ட இந்த மீனை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் இதில் அமினோ அமிலங்கள் இரத்தத்தில் சிவப்பு அணுக்களில் எண்ணிக்கையினை அதிகரிக்க செய்யும்.
Sardines
அதிக விட்டமினை கொண்ட எண்ணெய் மீனாகும். இது சருமத்தினையும் எலும்பினையும் உறுதிப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்து இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.
Crayfish
கடல்நண்டில் விட்டமின் பி, மினரல், ஜிங்க், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியமானது நிறைந்துள்ளது. இதில் மிக குறைந்த அளவே கொழுப்பானது உள்ளது.
Catfish
கெளுத்தி மீனில் ஓமேகா 3, 6 மற்றும் மிக குறைந்த அளவிலான கலோரி உள்ளது. இதில் உள்ள விட்டமின் பி12 நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது. டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஏற்ற மீனாகும்.
Discussion about this post