பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ’தும்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் விரைவில் அவர் தனது தந்தை அருண்பாண்டியன் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் இந்தப் படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் அப்பா மகளாக நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் நீச்சலுடையுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் கிண்டலான சில கமெண்டுக்களை பதிவு செய்துவருகின்றனர்
ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் திடீரென நீச்சலுடை புகைப்படங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post