நடிகர் சந்திரபாபு பற்றி பேசுவோர், பலரும் முதலிர வன்றே மனைவியின் கண்ணீருக்கு மதிப்பு தந்து காதலனுடன் பெருந்தன்மையுடன் அனுப்பி வைத்ததாக சொல்லி புளங்காகிதப்படுவார்கள்..
இதைத்தான் அந்த ஏழு நாட்கள் படத்தில் கே.பாக்யராஜ் கிளைமாக்சாக வைத்து பின்னர் எண்ட சாரே எண்டே காதலி நிங்களுக்கு மனைவியாகலாம். ஆனா நிண்ட மனைவி காதலியாக முடியாதுன்னு மாத்திட்டதாகவும் சொல்லுவாங்க..
ஆனா நாம 20 வருஷங்களுக்கு முன்னாடி திரையுல ஜாம்பவான்களிடம் இந்த சமாச்சாரம் பற்றி பேச சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பலரும் சொன்ன தகவல்கள் இதுதான்..
முதலிரவுகூட நடக்காமல் மனைவியை காதலனோடு அனுப்பி வைத்தார் என்பதெல்லாம் முழுக்க முழுக்க கட்டுக்கதை.. உண்மையில் சந்திரபாபு மனைவி ஷீலாவோடு பெங்களுருவில் தேனிலவு கொண்டாடினார்..
மூன்று மாதங்கள் போன நிலையில்தான் தனக்கு காதலன் இருப்பதாகவும் அவர் மனம் முழுக்க ஆட்டிப்படைப்பதால் மன அளவில் உண்மையான மனைவியாக இருக்க முடியவில்லை என்று ஷீலா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. டைரக்டர்களில் பீஷ்மர் எனப்படும் கே.சுப்ரமணியம், எம்.ஜிஆர் போன்றோர் தலையிட்டும் சரிசெய்யமுடியவில்லை..தம்பதியர் கடைசியில் பிரிந்தேபோனார்கள். ஷீலா புதுக்கணவரோடு லண்டனில் செட்டிலாகிவிட்டார்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சந்திரபாபுவின் மனைவி, தனக்கு காதலன் இருப்பதாகத்தான் சொன்னார். ஆனால் அவன் திருமணத்திற்கு முன்பே இருந்தவனா இல்லை பின்னாடி வந்து சேர்ந்தவனா என்பதுதான் விடைதெரியாத விஷயம்..
1959ல் சினிமா உலகைவிட்டே ஓடிப்போய் டெல்லியில் தனியாக தங்கி மதுவே கதி என்று கிடக்கும் அளவுக்கு சந்திரபாபுவை பாதிக்கச்செய்தது இந்த விஷயம்தான்..பிறகு திரும்பிவந்தது இரண்டாவது இன்னிங்சை சினிமாவில் சந்திரபாபு ஆரம்பித்தது தனிக்கதை
அப்புறம் இன்னொரு கதை, சந்திரபாபு பண்ண சேஷ்டைகளால் எம்ஜிஆர் இழுத்தடிச்சி அழவைத்தார் என்பது உண்மைதான்..ஆனால் எம்ஜிஆரால்தான் சந்திபாபு அப்படியே போண்டியானார்னு சொல்லிகிட்டு திரியறதுதான் செம பேத்தல். அப்புறம் எப்படி அதன் பின்னாடி கண்ணன் என் காதலன் அடிமைப்பெண் போன்ற படங்களில் எம்ஜிஆருடன் சந்திரபாபு நடித்தார்?, சந்திரபாபுவை ஹீரோவா போட்டு கவலை இல்லாத மனிதன் படத்தை எடுத்த கண்ணதாசனை கேக்கணும்..
Discussion about this post