ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பமாக அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு உடலை ரெயில்வே தண்ட வாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனையில் அவர் கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் இந்த வழக்கை மதிகோன் பாளையம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினார்கள். மதிகோன் பாளையம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து குப்பனின் 2-வது மனைவி ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது; குப்பனின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நான் குப்பனை 2-வது கல்யாணம் செய்தேன். ஏற்கனவே எனக்கு கல்யாணமாகி ஒரு மகன் உள்ளார். எனக்கு தவறான சாவகாசமா இருந்ததால், என் கணவரும் என்னைவிட்டு பிரிந்து சென்றதால், இரண்டாவதாக குப்பனை கல்யாணம் செய்துகொண்டு மகனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன்.
இந்நிலையில், இதே ஊரைச்சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். எங்கள் காதல் விவகாரம் எப்படியோ எனது கணவர் குப்பனுக்கு தெரிந்துவிட்டது, இதனால் என்னை கண்டித்தார். ஆனால் என்னால் அந்த இளைஞரை மறக்க முடியவில்லை, இதனால் எனக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன், நேற்று முன்தினம் அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த அவர் தலையில் கல்லை தூக்கிப் போட்டு விட்டேன். துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனையடுத்து சொந்தரர் ஒருவரை போன் போட்டு வரவழைத்து அவரின் உதவியோடு அவரது பிணத்தை தண்டவாளத்தில் போட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர் என இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Discussion about this post