பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது Galaxy M ஸ்மார்ட்போனின் வரிசையில் Galaxy M21-ஐ மார்ச் 16-ஆம் தேதி அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
Galaxy M21-ன் சிறப்பம்சம் அதன் மூன்று பின்புற கேமரா அமைப்பாக இருக்கும், இது 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருடன் வர வாய்ப்புள்ளது என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்துடன் Galaxy M21-ல் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கூடுதலாக 6,000mAh பேட்டரி இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டியுள்ளன.
இந்த சாதனம் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-ஆல் இயக்கப்படுகிறது, மேலும் இது இரண்டு வகைகளில் வரலாம் [4GB RAM + 64GB உள்ளடக்க சேமிப்பு மற்றும் 6GB RAM + 128GB உள் சேமிப்பு] எனவும் கூறப்படுகிறது.இந்தியாவில் Samsung Galaxy M21 விலை ₹10,999-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post