போக்சோ சட்டத்தின் கீழ் தன் மீது போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு பயந்து, 55 வயது முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூர் அருகேயுள்ள கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில், இறந்தவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்கா சிந்து நகரிலுள்ள ஆசிரமத்தில் இருந்த ராஜசேகரன் (எ) பூர்ண சேவானந்தா என்பதும், அவரின் சொந்த ஊர் திருப்பூர் முருங்கபாளையம் என்பதும் தெரியவந்தது.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட முதியவரின் உடல்.திருப்பூர் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில், இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு இருப்பதாகவும், அந்த வழக்கின் விசாரணைக்குப் பயந்து, அவர் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்பதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Discussion about this post