அமைதிப்படை, இந்தியன், என பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. இவர் சமீப காலமாக அரசியல் குறித்து அவ்வப்போது ட்வீட் போட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி குறித்து, அஜித் ரசிகர்கள் என்று சிலர் ட்விட்டரில் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர்.
அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளார். மேலும், தனது ட்வீட்டில், அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார். மேலும், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும், இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
சுரேஷ் சந்திரா சார் நீங்க, இந்த விஷயத்தை கண்டும் காணாத மாதிரி இருப்பது, அவளால என்ன பண்ண முடியும், கதறுவதை தவிர என்ற திமிர் எங்கே இருந்து வந்தது. உங்கள் மெளனத்தில் இருந்து வந்தது? என்று பதிவிட்ட கஸ்தூரி, தமிழ்நாடு போலீஸ், இந்த ஸ்க்ரீன் ஷாட் பதிவுகளை புகாராக அளிக்கிறேன்.
நீங்களாவது நடவடிக்கை எடுங்க என்றுள்ளார்.ஏற்கனவே இந்த நாயின் ஒரு அக்கௌன்ட் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. வவுனியா மற்றும் ஈழத்து சொந்தங்களே, உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்.” என்றும் மற்றொரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி மனம் நொந்து பதிவிட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் அஜித் போட்டோ டிபியை வைத்துக் கொண்டு ஆபாசமாக கமெண்ட் செய்து வருவது மிகவும் மோசமான விஷயம். தனது பெயரில் போலி கையெழுத்து வெளியானதும், உடனடியாக அறிக்கை விட்ட நடிகர் அஜித், நடிகை கஸ்தூரியின், இந்த நேரடி புகார்களுக்கு, தனது ரசிகர்களுக்கு ஒரு கண்டன அறிக்கை வெளியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Discussion about this post