திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, கொரோனா பாதிப்பு குறித்து அரசுதான் பீதியைக் கிளப்புகிறது. தமிழகத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் போன் செய்தாலே இருமுகிறார்கள். கொரோனா பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் வருகிறது. சட்டமன்றத்துக்கு வந்தால் சுகாதார பெண் பணியாளர்கள் கையை கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். மூன்று நிமிடம் வரை கைகழுவ வேண்டும். ஏசியில் உட்காரக் கூடாது என்று பயமுறுத்துகிறார்கள்.
ஏசி அறையில் உட்காரக் கூடாது என்றால் சட்டமன்றத்தில் நமக்கே பாதுகாப்பு இல்லை. நாளை முதல் மாஸ்க் போட்டுத்தான் சட்டமன்றத்துக்கு வர வேண்டும். ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது? இருமுவதற்கே பயமாக இருக்கிறது. இத்தாலியில் போப் ஆண்டவர் பேசும்போது ஒருவர் கூட இல்லை. சீன அதிபர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என நகைச்சுவையாகப் பேசினார்.
Discussion about this post