எந்த வாரிசு அரசியலை எதிர்த்து, விளாசிப் பேசி தி.மு.க.வை குலை நடுங்க வைத்தாரோ அதே வாரிசு அரசியலைத்தான் விஜயகாந்தும் செய்ய துவங்கியுள்ளார். இதற்காக கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் அவர்.
இந்த இம்சை போதாதென்று புது இம்சை அவரது குடும்பத்துக்கு உள்ளேயே இருந்தே கிளம்பியுள்ளது. அதாவது, விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவை தே.மு.தி.க.வின் பொருளாளர் ஆக்கியிருக்கிறார். கூடவே மூத்த மகன் பிரபாகரனையும் களமிறக்கிவிட்டார்.
இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கும், கேப்டனின் மச்சான் சுதீஷூக்கு பெரும் கலக்கத்தை தந்துள்ளன. நிர்வாகிகள் நியமனத்தில் துவங்கி தேர்தல் நடவடிக்கைகள் வரை எல்லாவற்றிலும் தனக்கென தனி லாபி செய்து கொண்டிருந்த சுதீஷுக்கு அக்கா மகன் விஜய பிரபாகரனின் வருகை மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்திருக்கிறதாம். இனி சுதீஷின் ஆதரவாளர்கள் குட்டையை குழப்ப துவங்குவார்கள் என தகவல்.
Discussion about this post