உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது சபரிமலை விவகாரத்தை. இந்நிலையில் கேரளாவின் தர்பூசணி புகழ் பாத்திமா ரெஹானா நானும் ஐயப்ப சாமிதான் டா! என்று மாலை போட்டு, கருப்பு வேஷ்டி சட்டை போட்டார். கூடவே தொடை தெரிய அதை தூக்கிக் கட்டி செல்ஃபியும் எடுத்துப் போட்டார்.
டென்ஷனானது ஐயப்ப பக்தர் வட்டாரம். இந்நிலையில் ஆந்திர டி.வி. சேனல் நிருபர் கவிதாவுடன் பம்பை கடந்து, போலீஸ் பாதுகாப்புடன் நடைப்பந்தல் வரை சென்றவரை பக்தர்கள் பெரும் ஆர்பாட்டம் நடத்தி தடுத்து நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில் ரெனானா மற்றும் அவரது குடும்பத்தை இஸ்லாத்திலிருந்தே நீக்கிவிட்டது கேரள முஸ்லீம் ஜமா அத். ஆனாலும் ஆத்திரம் தீராத ஐயப்ப பக்தர்கள் ‘மனித இனத்துலேயே சேர்க்க முடியாத அத (பாத்திமா ரெஹானா) தூக்கி ஜெயில்ல போடுங்க சார்.’ என்கின்றனர்.
Discussion about this post