போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவை நடத்துகிறார் இன்று. சொந்தக்காரன், சொக்காரன், பங்காளிகளை கூப்பிட்டு நடத்துவது சாதாரண மனுஷன் வழக்கம். ஆனால் அவரு அமைச்சரல்லவா அதனால் முதலமைச்சர்களை அழைத்து விழாவை சிறப்பிக்கிறார்.
பெரிய மனுஷன் என்னவோ பண்ணிட்டு போவட்டும்! என்று இதை கடந்து சென்றுவிட முடியவில்லை. காரணம்?…அமைச்சர் வீட்டின் இந்த விழாவுக்காக அரசு இயந்திரம் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதுதான்.
4 நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழகம் முழுக்க பயணிகள் கூட்டம் முண்டியடிக்க, ஹாஸ்டல் மாணவிகள் கல்லூரிக்கு திரும்ப முயற்சிக்க, பல நூறு அரசு பஸ்கள் இந்த விழாவுக்காக அனுப்பப்பட்டு விட்டனவாம். இந்த விழா களைகட்டியதில் அமைச்சர் மகளுக்கு சந்தோஷ சிரிப்பு, ஆனால் பஸ் கிடைக்காத மாணவிகள் அழுது தீர்த்துவிட்டனர்.
Discussion about this post