* வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி சிக்ஸர்களை தட்டித் தூக்கிக் கொண்டே இருக்கிறார். ஆனால் சினி துறையில் வைரமுத்துவுக்கு யாரும் சப்போர்ட் செய்யவுமில்லை, சாடவுமில்லை வெளிப்படையாக.
கமல்ஹாசன் ‘வைரமுத்து விவகாரத்தில் மூன்றாவது நபர் கருத்து சொல்லக்கூடாது.’ என்று நழுவினார். ரஜினியோ ‘இதற்கு வைரமுத்துதான் பதில் சொல்ல வேண்டும்.’ என்றார்.
இந்நிலையில் குஷ்புவோ இன்று வைரமுத்துவுக்கு முழு ஆதரவாக பேசியுள்ளார். அவர் ஒரு பேட்டியில் ‘நான் வாழ்க்கையில் சந்தித்த மிக சிறந்த பண்பாளர் வைரமுத்து.’ என்று கூறியுள்ளார்.
துவண்டு கிடந்த கவிப்பேரரசை இது தூக்கி நிறுத்துகிறது லேசாக.
(குஷ்பு! உன் வார்த்தைகளால் வைருவின் மனதில் நம்பிக்கை பூ)
* தமிழில் மரணமாஸ் ஹிட் அடித்திருக்கும் 96 படத்தின் தெலுங்கு உரிமையை நடிகர் நானி வாங்கியிருக்கிறார். விஜய்சேதுபதியின் கேரக்டரில் நானி நடிக்க, த்ரிஷாவே தெலுங்கிலும் பண்ணுகிறார் என்றார்கள் துவக்கத்தில். பின் த்ரிஷா இடத்தில் சமந்தா என்றார்கள். இப்போதோ சமந்தா அந்த தகவலை மறுத்திருக்கிறார் என்று பேசப்படுகிறது.
(நல்ல படத்துல யாராச்சும் நடிங்க கேர்ள்ஸ்!)
* சண்டக்கோழி – 2 வெளியாகும் முன் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, படம் தாறுமாறு! என சிலர் கிளப்பிவிட்டனர். ஆனால் ரிலீஸான பின் சூழல் தலைகீழாகிவிட்டது. அரத பழைய டைப் காட்சிகள், கீர்த்தியின் லூசு நடிப்பு, வரலெட்சுமியின் கடுப்பேற்றும் வில்லத்தனம், உப்பு சப்பில்லாத சீன்ஸ்! என்று கழுவி ஊற்றிவிட்டனர் சில ரிவியூவில். விளைவு ‘ச.கோ – 3 நிச்சயம் வரும்’ என்று விஷால் சொன்ன வார்த்தை நிச்சயம் நிறைவேறாது! என்கிறார்கள்.
(கோழியை அறுத்து கொழம்பு வெச்சுட்டீயே லிங்கு)
Discussion about this post