தமிழக அரசின் வருமானத்துக்கு கர்ணன்களாய் அள்ளியள்ளி கொடுப்பவர்கள் யார்? நம்ம குடிமகன்கள் தான். அவர்கள் குதூகலித்து கூத்தாடும் வகையில் ஒரு சேதி.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு 4700 மதுபான கடைகள் உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டிய இரண்டு நாட்களில் டாஸ்மாக் விற்பனை இருநூற்று நாற்பது கோடியாக இருந்தது. அது அதற்கு முந்தைய வருடத்தை விட தொண்ணூறு கோடி ரூபாய் குறைவாம்.
இந்நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு மது விற்பனையை வைத்து செம்ம அள்ளு அள்ளிவிடும் முடிவில் இருக்கிறது தமிழக அரசு. அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு 15 நாட்களுக்கு தேவையான சரக்கை இருப்பு வைக்க முடிவு செய்துள்ளது. ஹாட், பீர் என்று எல்லாமே இருக்குமாம், நல்லாவே இருக்குமாம்.
இந்தாண்டு தீபாவளிக்கு அரசு எதிர்பார்க்கும் டாஸ்மாக் வசூல் எவ்ளோ தெரியுமா? ஜஸ்ட் நானூறு கோடி ரூபாய்.
ச்சும்மா ஜிவ்வ்வுன்னு ஏறுதுல்ல.
Discussion about this post