’மீ டூ’
– பல ஆண்களின் மட்டுமல்ல சில பெண்களின் மறுபக்கத்தையும் தோலுரிக்க துவங்கியுள்ளது போகிற போக்கில்.
இயக்குநர் சசி கணேசன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று எழுத்தாளர் லீனா மணிமேகலை சாடியதற்கு, மிக கடுமையான மறுப்பு விமர்சனத்தை வைத்த சுசி, லீனாவை சேற்றில் புரளும் பன்றி, ஆபாசக் கவிதைகளை எழுதும் கவிஞர்! என்று குதறினார்.
கூடவே ‘என்னிடம் லீனா பேட்டி எடுத்தது அரைமணி நேரம் தான். அதன் பின் ஒரு அந்நியரை (தன்னை) நம்பி காரில் ஏறிய லீனா சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்?’ என்று கேட்டுள்ளார் சுசி கணேசன்.
இந்த வார்த்தைகளுக்காக மிக கடுமையான விமர்சனத்தை வாங்கி கட்டியுள்ளார் சுசி. கூடவே மேற்படி சம்பவம் பற்றி தனக்கு முன்பே தெரியும் என கொளுத்திப் போட்டுள்ளார் ஜெயமோகன்.
Discussion about this post