மீ டூ’ அங்கே சுற்றி இங்கே சுற்றி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் கால்களையும் கடிக்க துவங்கிவிட்டது.
அமைச்சர் ஜெயக்குமாருக்கும் – சிந்து எனும் பெண்ணுக்கும் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, வாட்ஸ் அப்பில் வெளியாகும் பிறப்புச் சான்றிதழ் வைரல் பண்ணிக் கொண்டிருகிறது. இதையும் ‘மீ டூ’வோடு முடிச்சுப் போட்டுன் தி.மு.க.வினர் அமைச்சரை சேதாரம் செய்ய துவங்கியுள்ளனர் மீம்ஸ் வடிவில்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஃபாத்திமா பாபுவுக்கு ஸ்டாலின் தொந்தரவு கொடுத்தார்! என்று ஓடிக் கொண்டிருந்த அரத பழைய விவகாரத்துக்கு புது பெயிண்ட் அடித்து மீண்டும் கிளப்பியுள்ளனர் இணையதளத்தில்.
’ஃபாத்திமா பாபுவே இதை மறுத்துடார்’ என்று தி.மு.க.வினர் சொல்லியும் அடங்கியபாடில்லை.
இன்னும் என்னென்ன நடக்குமோ?
Discussion about this post