சர்ச்சைக்கு பெயர்போன நடிகர் சிம்பு தற்போது #MeToo சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் சிம்பு மீது நடிகை லேகா வாஷிங்டன் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் பல்வேறு நபர்கள் மீது #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதில் வைரமுத்து, அர்ஜுன், சுசி கணேஷ், தியாகராஜன் என பல்வேறு நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் பிரபலமாகி வரும் #MeToo சர்ச்சை தற்போது சிம்புவின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி பாதியில் கைவிடப்பட்ட படம் கெட்டவன். இப்படத்தில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் #MeToo மூலம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரு வார்த்தை: கெட்டவன்’ என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் மறைமுகமாக சிம்புவை குறிப்பிட்டுள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post