நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம், நிர்மல் குமார் அமர்வு, எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
அதனை ஏற்று இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜரான எச்.ராஜா, “உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசிவிட்டேன்” எனக்கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர். சர்ச்சை பேச்சு வீடியோ வெளியான மறுநாள் தான் பேசவில்லை எனவும், வீடியோ எடிட் செய்யப்பட்டது எனவும் எச்.ராஜா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post