கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட பாதிரியார் குரியகோஸ் மர்மமான முறையில் இறந்துள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், பிராங்கோ முலக்கல் மீது புகார் அளித்தவர்களில் முக்கியமானவர் பாதிரியார் குரியகோஸ். ஜலந்தர் மறைமாவட்ட திருச்சபையின் கீழ் பணியாற்றி வந்த அவர் இன்று காலை பஞ்சாப் மாநிலம் போக்பூரில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக குரியகோஸ் தொடர்ந்து கூறி வந்த நிலையில் அவர் மரணத்துக்கு பின்னணியில் பெரிய சதி இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். எனினும், பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே குரியகோஸ் இறந்ததற்கான காரணம் தெரியும் என போக்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post