சூரிய வெளிச்சத்தினால் உடலுக்கு சக்தி கிடைக்கின்றது. மேலும் செரிமான சக்தி, சுறுசுறுப்பு முதலியவை கிடைக்கின்றது. பழங்காலத்தில் சூரியன் மறையும் நேரத்தில் உணவினை உண்டு அனைவரும் உறங்க சென்று விடுவார்கள். ஆனால் தற்போது சூரிய வெளிச்சத்தில் எவருமே வருவதில்லை. ஏசியில் இருந்து பழகுகிறார்கள்.
ஆனால் ஏசியில் இருந்த வெளிநாட்டவர்கள் அதனை புரிந்து வெயிலின் நன்மையறிந்து சூரிய வெளிச்சத்திற்கு வருகின்றனர். சூரிய ஒளியில்தான் வைட்டமின் டி என்னும் சத்து கிடைக்கின்றது. இவை எலும்பு, பல், மற்றும் அனைத்து உறுப்புக்கள் செயல்பாட்டிற்கும் நன்மையளிக்கும். சூரிய ஒளி நேரடியாக நமது தோலில் படும்போது வைட்டமின் டி உருவாகிறது. எனவே தினமும் அல்லது வாரத்தில் 3 அல்லது 4 முறை, 30 முதல் 40 நிமிடம் நிற்கலாம்.
முக்கியமாக கை,கால், முதுகு பகுதியில் சூரிய ஒளி பட வெண்டும். காலை மற்றும் மாலை சூரிய ஒளியே சிறந்தது. நாம் தூய்மையற்ற மாசுபாடு உண்டாக்கியதால் மிக அதிகமான சூரிய வெளிச்சத்தால் பாதிப்புகள் வரும். காலை, மாலையில் கட்டாயமாக சன்ஸ்கீரின் எதுவும் போடாமல் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் காட்ட வேண்டும். மற்ர நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் மருத்துவரின் பரிந்துரை கேட்டு சன்ஸ்கீரின் உபயோகிக்கலாம்.
வெயில் இல்லாத இடத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் முடிந்த வரை சூரிய வெளிச்சத்தில் செல்ல வேண்டும். இல்லையேல் அதற்கு தகுந்த உணவுகளை எடுக்க வேண்டும். அதாவது மீன், பால், முட்டை, கீரை ஆகியவை. இவ்வாறு சூரிய வெளிச்சத்தில் செல்வதால் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. அதிக சூரிய வெளிச்சத்தில் இருந்தால் முடியின் நிறமும் செம்பட்டை ஆகும். கண்களால் நேரடியாக அதிகமாக பார்க்க கூடாது.
Discussion about this post