அமெரிக்காவுடன் நிலவும் வர்த்தகப்போரினால் சீனாவின் பணக்கார பெண்மணியான சுஹு குவான்ஷின் 66 சதவீத சொத்தை இழந்துள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 50 ஆயிரம் கோடி ஆகும். இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் சீனா-அமெரிக்கா இடையே ‘வர்த்தப்போர்’ நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறிமாறி இறக்குமதி பொருட்களுக்கான வரியை உயர்த்தின. அமெரிக்காவின் வரிவிதிப்பால் சீனாவில் செல்போன்களுக்கான டச் ஸ்கிரீன் மற்றும் லென்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச்சந்தைகளில் கடுமையாக வீழ்ந்தது.
இதனால் அந்நிறுவனத்தின் தலைவர் சுஹு குவான்ஷின் சொத்து மதிப்பு 66 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவில் இதுவரை அதிகமான சொத்து கொண்ட பெண்மணியாக குவான்ஷின் விளங்கி வந்தார். இந்திய ரூபாய் மதிப்பில் 67 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு சொத்து இருந்தது. இந்த நஷ்டத்தால் அவர் ஒரு சில மாதங்களிலேயே சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொந்து மதிப்பை இழந்துள்ளார்.
தற்போது அவரின் சொத்து மதிப்பு வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான லென்ஸ் டெக்னாலஜி பெரிய அளவில் பொருட்களை தயாரித்து வருகின்றன. அமெரிக்க விதித்த வரியால், ஏற்றுமதி முடங்கி பெரும் நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்தித்து வருகிறது.
Discussion about this post