நடிகை ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சி தொகுப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி ஒன்றை அவர் தொகுத்து வழங்க உள்ளார். நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சிங்கம் 3’. அதன்பிறகு சுந்தர்.சி இயக்குவதாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது.
இதற்காக வாள் சண்டை கூட கற்றுக் கொண்டார். ஆனால் படம் தொடங்குவது தாமதமானதால் படத்தில் இருந்து விலகினார். இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இருக்கும் ஒரு நிகழ்ச்சியை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஷால், பிரசன்னாவைத் தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் என சினிமா நடிகர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை சன் டிவி ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post