சின்மயி சொல்லுவது உண்மைதான் என்றும், ஏற்கனவே சில பெண்கள் தன்னிடம் வைரமுத்து பற்றி கூறியுள்ளார்கள் எனவும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரஹானா பரபரப்பு தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜிவி பிரகாஷ்குமாரின் தாயுமான ஏ.ஆர். ரஹானா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘நான் மீ டூ-க்கு ஆதரவு தருகிறேன். அது மிகவும் நல்ல விஷயம். சுசி லீக்ஸ் வரும் போது அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று நான் நினைத்தேன்.
ஸ்ரீரெட்டியை பார்க்கும் போது பாவமாக இருந்தது. எதற்கு சம்மதிக்க வேண்டும், எதற்கு அதைச் செய்யாமல் விடவேண்டும். ஆனாலும் ஸ்ரீரெட்டியும் இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தது பாராட்டுக்குரிய ஒன்று. இது போன்று எங்கு நடந்தாலும் அதை களையெடுக்க வேண்டும். சின்மயி விவகாரத்தில் அவர் அப்போதே அதைப் பற்றி பேசி இருக்க வேண்டும், அது மறுபடியும் நடக்காமல் தடுத்து இருக்க வேண்டும். சின்மயி சொல்வதை நான் நம்புகிறேன்.
ஏனென்றால் ஏற்கனவே என்னிடம் சிலர் வைரமுத்துவைப் பற்றி கூறியிருக்கிறார்கள். ஒரு பெரிய மனுஷன் நம்ம தமிழுக்கு ஒரு அடையாளம். ஆனால் இது போன்ற விஷயங்களை முளையிலேயே கிள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு கல்யாணத்திற்குக் கூப்பிட்டு காலில் விழுறதுல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதே சமயத்தில் அவரை மட்டும் டார்கெட் பண்ணி காலி பண்ணனும்னு நினைக்கிறது தவறு, எல்லாருடைய பெயரையும் வெளியே சொல்லுங்கள், எல்லாரும் திருந்துங்கள்’ என்று கூறியுள்ளார்.
Discussion about this post