”மீ டூ” புகாரில் வைரமுத்து மீது சின்மயி புகார் தெரிவித்ததை போலவே , நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். அர்ஜூனும் அவரும் நிபுணன் எனும் படத்தில் ஒன்றாக நடித்த போது, 50 பேர் முன்னிலையில் வைத்து அதுவும் ஷூட்டிங்கின்போது அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்ததாக ஸ்ருதி கூறி இருக்கிறார்.
இந்த புகாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா பின் வருமாறு தெரிவித்திருக்கிறார். ஸ்ருதி என் அப்பா பற்றி கூறி இருக்கும் புகார் முற்றிலும் பொய். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான்.
மேலும் என் அப்பா அவரை டேட்டிங்குக்கு அழைத்ததாகவும் ஸ்ருதி கூறி இருக்கிறார். என் அப்பாவிற்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது. அவர் இது போன்ற பப்புகளுக்கோ சொகுசு விடுதிகளுக்கோ செல்வதே இல்லை என கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா.
Discussion about this post