தென்னிந்திய திரையுலகில் மும்தாஜை பற்றி தெரியாதவர்களே கிடையாது. டி.ஆர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், குஷி படத்தின் “கட்டிப்பிடி கட்டிப்பிடிடா” பாடல் மூலம் மிகப்பிரபலமடைந்தார். தொடர்ந்து கோலிவுட்டை ஒரு ரவுண்ட் வந்த இவர், சமீபகாலமாக வெள்ளித்திரையில் இருந்து ஓய்வில் இருந்தார். திரையில் மீண்டும் ஒரு ரவுண்டு வலம் வர நினைத்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கூடுதல் புகழடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கூடுதல் ரசிகர்களை சம்பாதித்த இவரிடம் “மீ டூ” புகார் பற்றி ஒரு பேட்டியின் போது கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது உங்களுக்கு இது மாதிரியான தொந்தரவுகள் வந்ததில்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு பதிலளித்த மும்தாஜ்,” இது மாதிரியான பிரச்சனைகள் எனக்கும் வந்திருக்கிறது.
அப்படி என்னிடம் அத்துமீற முயன்ற பிரபல இயக்குனர் ஒருவரை செருப்பாலேயே அடித்திருக்கிறேன். அதே மாதிரி வேறொரு இயக்குனரும் என்னிடம் ஷூட்டிங்குக்கு யாருடனாவது போனால் நன்றாக இருக்கும் என தூண்டில் போட்டு பேசிய போது, அவருக்கு செம நோஸ்கட் கொடுத்திருக்கிறேன். என தெரிவித்திருக்கிறார்.
Discussion about this post