அஜீத் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் தீனா. இந்த படத்திற்கு பிறகு தான் அஜீத்துக்கு தல அஜீத் என்ற பெயர் பிரபலமானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜீத் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் வேறு படங்கள் எதுவும் இதுவரை வரவில்லை. தீனாவிற்கு பிறகு அஜீத் ஒரு பக்கமும் , முருகதாஸ் ஒரு பக்கமும் பிஸியாகிவிட்டனர்.
இந்த இருவரும் இணைந்து அதன் பிறகு ஒரு படம் கூட செய்யாததற்கு என்ன காரணமும் என்று பல முறை இருவரிடமுமே கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது.
அஜீத்தும் முருகதாஸும் தீனா படத்திற்கு பிறகு மிரட்டல் எனும் படத்தில் இணைந்து பணியாற்றவிருந்தனர். ஆனால் அப்போது அஜீத் சில காரணங்களால் மிரட்டலை தள்ளிப்போட்டிருக்கிறார். அப்போது தான் முருகதாஸ் கஜினி படத்தை இயக்க சென்றிருக்கிறார். அதன் பிறகு எழுந்த கருத்து வேறுபாட்டால்,தான் இருவருமே இன்றுவரை இணையாமல் இருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
காலங்கள் கடந்திருக்கும் நிலையில் இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Discussion about this post