பீட்ரூட்டை நன்கு தோல் சீவி பின்பு அதனை அரைத்து அதன் விழுதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்தால் முகத்தில் சுருக்கங்கள் மறைந்து சருமம் இளமையாகும்.
சந்தனப் பொடி, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் மூன்றும் கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். சில வாரங்களில் 5 வயது குறைவாக தெரிவீர்கள்.
சுடு நீரில் குளிப்பதை தவிருங்கள். இவை சரும துவாரங்களை சுருங்கச் செய்வதோடு விரைவில் சுருக்கங்களை தந்துவிடும். அதிக நேரம் சுடு நீரில் குளிப்பதாலும் சுருக்கங்கள் உண்டாகும். பச்சைத் தண்ணீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
வைட்டமின் ஏ, சி, ஈ அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் சுருக்கங்கள் ஏற்படாது. ஏற்கெனவே உண்டான சுருக்கங்களும் நாளடைவில் மறைந்து இளமையான தோற்றத்தைப் பெறுவீர்கள்.
கேரட் சாறு எடுத்து அதனை சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும். மேலும் நிறமும் மிளிரும்.
ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்தில் சுருக்கங்கள் மறைந்து புதுப் பொலிவு உண்டாகும்.
இளமை என்பது எல்லாருக்கும் ஒரு முறை தான் வரும். ஆனால் திரும்ப திரும்ப வர வேண்டுமென்றால் கண்டிப்பாக இதுதான் சிறந்த முறையாக இருக்கும்.
Discussion about this post