உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 65 கிலோகிராம் எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளர்.
ஹங்கேரியில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் பிரீஸ்டைல் 65 கிலோகிராம் எடைப்பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா கியூபாவின் வால்டெஸ் டோபியரை சந்தித்தார்.
இந்த போட்டியில் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய பஜ்ரங், வால்டெஸ் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட போது மட்டும் பதிலடி கொடுத்து நிதானமாக விளையாடினார். அதே நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். போட்டியின் முடிவில் பஜ்ரங் 4க்கு 3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றார்.
இதையடுத்து சீனியர் உலக சாம்பியன் மல்யுத்த போட்டியின் பைனலுக்கு பஜ்ரங் பூனியா முதன் முறையாக முன்னேறியுள்ளார்.
Discussion about this post